×

வத்தலக்குண்டு அருகே கஞ்சா, மது விற்ற பெண்கள் உள்பட நான்கு பேர் கைது

வத்தலக்குண்டு, டிச. 31: கஞ்சா, மது விற்ற பெண்கள் உள்பட 4 பேரை வத்தலக்குண்டு போலீசார் கைது செய்தனர். வத்தலக்குண்டு அருகே மல்லணம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் மனைவி பாண்டியம்மாள்(40). இவரது தோட்டத்தில் சாணார்பட்டி, குரும்பபட்டியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி அன்னக்கொடி(50), ஒன்றரை கிலோ கஞ்சாவை விற்பனைக்கு எடுத்து செல்ல பதுக்கி வைத்திருந்தார். தகவலறிந்து வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் தலைமையில் ஏட்டு முருகன், நாகலெட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேற்று சென்று பாண்டியம்மாள், அன்னக்கொடியை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய லீலாவதி, கதிரேசன் ஆகியோரை தேடி வருகின்றனர். வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு பிரிவு பகுதியில் மணிப்பாண்டியன்(25), எம்.வாடிப்பட்டியை சேர்ந்த பாலமுருகன், வத்தலக்குண்டு விவேகானந்தா நகர் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றுக் கொண்டிருந்தார். போலீசார் இருவரையும் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags : persons ,women ,Wattalakunda ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...