×

விவசாயத்தை பாதுகாக்கணும் தமாகா விவசாய அணி அரசுக்கு கோரிக்கை

திருச்சி, டிச.31: சரிவடைந்து வரும் கரும்பு விவசயத்தை பாதுகாக்க வேண்டும் என்று தமாகா விவசாய அணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா முழுவதும் கரும்பு விவசாயம் 54 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு 2018 நவம்பர் மாத இறுதி வரை 40.69 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில் நடப்பு 2019 ஆண்டில் நவம்பர் இறுதியில் 18.85 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2018-19ம் ஆண்டில் மொத்தம் 331.61 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் 2019-2020ம் ஆண்டில் 40 சதவீதம் 268 லட்சம் டன் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி புள்ளி விபரங்களுடன் ஒப்பிட முடியாத அளவிற்கு மிகவும் குறைந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் சர்க்கரை உற்பத்தி மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. நாட்டில் சர்க்கரை உற்பத்தி குறைந்ததற்கு காரணம் கரும்பு சாகுபடி பரப்பும் விளைச்சலும் குறைந்ததே காரணமாகும். கரும்பு சாகுபடி பரப்பு குறைந்ததற்கு வறட்சி காரணமாக கூறப்பட்டாலும் உண்மை காரணம் வெட்டிய கரும்பிற்கு பணத்தை கரும்பாலைகள் விவசாயிகளுக்கு தராதது. நஷ்டம் கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு லாபம் தரும் தொழிலாக இல்லை என்பதுதான் உண்மை. எனவே மத்திய, மாநில அரசுகள் சர்க்கரை உற்பத்தி செய்யும் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள், கரும்பு விவசாயிகள், இரண்டு தரப்புக்கும் லாபம் தரும் தொழிலாக மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமாகா விவசாயி அணி தலைவர் புலியூர் நாகராஜன் அரசுக்கு வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Tamaka ,farming team ,government ,
× RELATED தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு...