×

தண்டவாளம் பராமரிப்பு பணி மத்திய அரசு ராணுவத்தை காவிமயமாக்க முயற்சிக்கிறது

திருச்சி, டிச.31: ராணுவத்தை காவிமயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக கி.வீரமணி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். திருச்சி பெரியார் மாளிகையில் ஈ.வெ.ரா மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தி.க தலைவர் வீரமணி கலந்து கொண்டு தந்தை பெரியாரின் பொதுவுடமை சிந்தனைகள், அய்யாவின் அடிச்சுவட்டில், வாழ்வியல் சிந்தனைகள் ஆகிய புத்தகங்களை வெளியிட்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் கருத்து கூறிய ஒருவரை முப்படைகளுக்கு தலைமை தளபதியாக நியமிப்பது என்பது அவருக்காகவே அந்த பதவி உருவாக்கப்பட்டுள்ளது போன்று உள்ளது. இது நிச்சயம் உள்நோக்கம் கொண்டது. எவ்வளவு சரியான நடவடிக்கைகள் எடுத்தாலும் அதில் உள்நோக்கம் ஒன்று இருப்பதாக தெரிவது தான் அந்த விஷயத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. பிபின் ராவத்தை அந்த பதவியில் அமர்த்தியிருப்பது காவி சிந்தனையை ராணுவத்திற்குள் புகுத்த செய்யும் நடவடிக்கை தான். குடியுரிமை சட்டத்தில் முஸ்லீம்களை மட்டும் இந்த அரசு தனிமைப்படுத்தப்பார்க்கிறது. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸின் கொள்கையான இந்து ராஷ்டிரத்தை அமைக்க எடுக்கப்படும் முயற்சி தான் இது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான இந்த சட்டத்தால் நாடு கொந்தளிப்பில் உள்ளது. அதற்கு காரணம் மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் தான் என கூறினார். இந்த கூட்டத்தில் திராவிடர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags : Central Govt ,military ,
× RELATED ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து விபத்து..!!