×

ஊட்டி மார்க்கெட் எதிரில் பைக் பார்க்கிங் தளமாக மாற்ற கோரிக்கை

ஊட்டி, டிச. 31: ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள்  வருகின்றனர். அதேபோல், கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மக்கள் பல்வேறு  தேவைகளுக்காக ஊட்டி வருகின்றனர். இங்கு வருபவர்கள் காய்கறிகள், பழம் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ஊட்டி மார்க்கெட்டிற்கு வருகின்றனர்.  மார்க்கெட்டில் வாகனங்கள் நிறுத்த போதுமான இட வசதி இல்லாத நிலையில், எதிரோ  உள்ள சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். ஆனால்,  பெரும்பாலான வியாபாரிகள் தங்களது வாகனங்களை சாலையோர பார்க்கிங்கிங் பகுதியில்  நிறுத்தி வந்ததால், அங்கு சுற்றுலா பயணிகளோ அல்லது உள்ளூர் மக்களோ வாகனங்களை நிறுத்த  முடியாத நிலை இருந்தது.
இதனால், மார்க்கெட்டிற்கு வரும் மக்கள் சாலையிலேயே  வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், குதிரை பந்தய மைதானத்தில்  பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்துள்ளதால், தற்போது மார்க்கெட் எதிரோ உள்ள  பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த அனுமதிப்பதில்லை. அனைத்து  வாகனங்களும் ஏ.டி.சி. அருகேயுள்ள குதிரை பந்தய மைதானத்தில் வாகனங்கள்  நிறுத்தப்படுகிறது. மார்க்கெட் எதிரே உள்ள பார்க்கிங் தளங்களில்  வாகனங்கள் நிறுத்த போலீசார் அனுமதிப்பதில்லை. இதனால், சுற்றுலா பயணிகள்  மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் பாதித்துள்ளனர். நான்கு சக்கர வாகனங்கள்  நிறுத்த அனுமதிக்காத நிலையில், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதிக்க  வேண்டும். எனவே பைக் பார்க்கிங் தளமாக மாற்ற வேண்டும்  என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் மார்க்கெட்டிற்கு வரும்  உள்ளூர் மக்கள் பயனடைவார்கள்.

Tags : Ooty Market ,
× RELATED பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்...