×

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைகிறது

கோவை, டிச 31:கோவை, திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ளது.  கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் முதல் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தனி வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் என வரும் அனைத்து நபர்களுக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை கோவை அரசு மருத்துவமனை டெங்கு வார்டில் காய்ச்சல் பாதிப்பினால் 90 பேர் வரை சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் பாதிப்பு குறைய துவங்கியுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி திருப்பூரை சேர்ந்த 16 பேர், ஈரோட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் கோவையை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 20 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும், வைரஸ் காய்ச்சலுக்கு 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழை இல்லாத காரணத்தினால் காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனனர்.

Tags : districts ,Coimbatore ,Tirupur ,
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை