கோவையில் சுப்ரீம் மொபைல்ஸ் புதிய கிளைகள் நாளை துவக்கம்

கோவை,டிச.31:கோவை உக்கடம் மற்றும் சாய்பாபா காலனி பகுதிகளில் திருப்பூர் சுப்ரீம் மொபைல்ஸின் புதிய கிளைகள் நாளை துவக்கப்படுகிறது. இது குறித்து சுப்ரீம் மொபைல்ஸ் மண்டல விற்பனை மேலாளர்கள் சிவராஜ் மற்றும் தவுபீக்  கூறியதாவது:- திருப்பூர் சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் கோவை, திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், கரூர், தர்மபுரி, ஒசூர், பொள்ளாச்சி, உடுமலை, கோபி, பழனி, தாராபுரம், பல்லடம், அவினாசி ஆகிய நகரங்களில் 43 கிளைகளுடன் இயங்கி வருகிறது. கோவை உக்கடத்தில் 44வது கிளையும், சாய்பாபா காலனியில் 45வது கிளையும் நாளை  துவங்கப்பட உள்ளது. புதிய கிளைகளை எல்.ஜி விநியோகஸ்தர் வாஸ்துபால் ரஜினிகாந்த் திறந்து வைக்கிறார். திறப்பு விழாவையொட்டி டி.வி, குக்கர், ஹெட்செட், டிராவல் பேக், மிக்ஸி முதலிய பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் மொபைல் போன் நிறுவனங்களின் ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. ரூ. ஒரு லட்சம் வரை உடனடி கடன் வசதி, எக்சேஞ்ச் ஆஃபருக்கு நல்ல விலை, பஜாஜ் பின்சர்வ், எச்டிஎப்சி,டிவிஎஸ் கிரெடிட், ஹோம் கிரெடிட் முதலிய நிறுவனங்களின் இன்ஸ்டன்ட் பைனான்ஸ் வசதி ஆகியவை வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: