×

ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து தப்பிய கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு நரசிம்மன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (44). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை மருத்துவமனையிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வீட்டிற்கு வந்த வெங்கடேசன் வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில், மருத்துவமனையில் இருந்த வெங்கடேசனின் மனைவி சத்தியா, கணவரை காணவில்லை என பல இடங்களில் தேடினார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.  இதுகுறித்து தகவலறிந்த பேசின் பிரிட்ஜ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

„ திருவல்லிக்கேணி கெனல் சாலையை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி. கடந்த 25ம் ேததி நள்ளிரவு வீட்டின் மூன்றாவது மாடியில் நின்றுகொண்டு தனது தோழியிடம் செல்போனில் பேசி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிறுமியின் கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தாள். அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி ேநற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தாள். „ அண்ணாநகரை சேர்ந்த கல்லூரி மாணவர் சரவணலோகன் (16). இவர் கடந்த 22ம் தேதி இரவு தஞ்சாவூர் செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் அருகே ஆம்னி பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், சரவணலோகனை சரமாரி தாக்கி, செல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாலிகிராமத்தை சேர்ந்த காய்ஸ் கான் (18), புழல், காவாங்கரையை சேர்ந்த கபீர் (20) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

„ சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சைத்தானி (27). நேற்று முன்தினம் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து நண்பர்களுடன் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள், சைத்தானி வைத்திருந்த செல்போனை பறித்துகொண்டு பைக்கில் தப்பினர். இதேபோல் ஏழுகிணறை சேர்ந்த சுபாஷ் என்பவரது செல்போனையும், பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். „ கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் விஜய் (19). ஒரகடம் அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் விஜய், ஒரகடத்தில் இருந்து வஞ்சுவாஞ்சேரி நோக்கி பைக்கில் புறப்பட்டார். பணப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜய் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Tags : suicide bidder ,investigation ,Stanley Hospital: Police ,
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை