×

உள்ளாட்சி தேர்தலில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்த வாக்குமைய அதிகாரிகள்

சேலம், டிச.31:சேலம் ஒன்றியத்தில் 2ம் கட்ட உள்ளாட்சி  தேர்தல் நடந்த பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிகாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.சேலம் மாவட்டத்தில், மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இதில் 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கான முதற்கட்ட தேர்தல்கடந்த 27ம் தேதி நடந்தது. இதையடுத்து மீதியுள்ள 8 ஒன்றியங்களுக்கான 2ம் கட்ட தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் சேலம் ஒன்றியத்துக்குட்பட்ட மல்லமூப்பம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி,  வட்டமுத்தாம்பட்டி உள்ளிட்ட வாக்குசாவடிகளுக்கு நேற்று முன்தினம் அதிகாரிகள், போலீசார் தேர்தல் பணிக்கு சென்றனர். இந்நிலையில், தேர்தல் பணிக்கு வந்த அதிகாரிகளுக்கு அடிப்படை வசதிகள் இன்றி தவித்தனர். இந்த பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் பெண் அதிகாரிகள் அதிகளவில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு தங்கும் இடம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல் சிரமப்பட்டனர். இதையடுத்து கிராம மக்கள் தங்களுடைய வீட்டில், அவர்களை தங்க அனுமதித்தனர். மேலும், அனைத்து வசதிகளையும் தேர்தல் அதிகாரிகளுக்கு செய்து தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : facilities ,elections ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...