×

வாக்கு செலுத்திய பின்பும் வரிசையில் நின்ற வாக்காளர்கள்

சேலம், டிச.31:சேலம் மாவட்டத்தில்  8 ஒன்றியங்களுக்கான 2ம் கட்ட தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் சேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சர்க்கார் கொல்லப்பட்டி அரசு பள்ளியில் அந்த பகுதி மக்கள் வாக்களிப்பதற்காக 4 பூத் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பூத்தில் திமுக, அதிமுக மற்றும் சுயேட்சை என போட்டியிடும் வேட்பாளர்கள் காலை 7 மணிக்கு வாக்களித்தனர். இதனை ெதாடர்ந்து, பொது மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். மேலும் 11.30 மணியளவில் வாக்கு பதிவு செய்ய ஏரளாமான வாக்களார்கள் வந்தனர். காலையில் வாக்களித்த பலர், திரும்ப வந்து வரிசையில் நின்றனர். அவர்களின் கையில் அடையாள  மை இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். இவர்கள் தங்களுடைய வாக்கினை பதிவு செய்தது அப்போது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை எச்சரித்த போலீசார், அங்கிருந்து வெளியே அனுப்பினர். இந்த சம்பவத்தால் கொல்லப்பட்டி வாக்குச் சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Voters ,vote ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு