×

ஆங்கில புத்தாண்டையொட்டி அசம்பாவிதங்களை தடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பு

நாமக்கல், டிச.31: நாமக்கல் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் 1ம் தேதி புத்தாண்டு தினத்தையொட்டி, 31ம் தேதி இரவு முதல், எந்தவிதமான சிறு அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க, காவல்துறை சில நிபந்தனைகளை பின்பற்றுமாறு, நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது, கட்டாயமாக தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் போது, கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். வாகனங்களை அதிவேகமாகவும், மது அருந்தி விட்டும் இயக்க கூடாது. அதிக அளவிலான ஒலி எழுப்பக்கூடிய, கூம்பு வடிவிலான ஒலிப்பெருக்கியை மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பயன்படுத்த கூடாது. இரவு 10 மணிக்கு மேல் 3நபர்களுக்கு மேல், பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். இரவில் அதிக அளவிலான ஒலி மற்றும் ஒளி எழுப்பகூடிய வெடிகளை பயன்படுத்த கூடாது. பொது இடங்களில் இரவு நேரங்களில் பொழுதுபோக்கு மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. பொது இடங்கள் மற்றும் சாலைகளில் புத்தாண்டு வாழ்த்து செய்திகள் ஏதும் எழுத கூடாது. பொது இடங்கள் மற்றும் சாலைகளில் கேக் வெட்டக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : the New Year ,
× RELATED 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்...