×

ஓசூரில் புதினா விலை சரிவு

ஓசூர், டிச.31: ஓசூரில் புதினா விலை சரிந்து, கட்டு ₹5க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி தாலுகாவில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், கீரைகள், கொய்மலர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு விவசாயிகள் நேரடியாக அனுப்பி வருகின்றனர். தற்போது ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி தாலுகா பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் புதினா பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக புதினா விலை சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஒரு ஏக்கரில் புதினா பயிரிட ₹25 ஆயிரம் வரை செலவாகிறது. 90 நாட்களுக்குள் வளர்ந்து விளைச்சல் தடும் புதினாவை ஒருமுறை  பயிரிட்டால் 3 வருடங்கள் தொடர் விளைச்சல் தரும். தற்போது ஓசூர் முழுவதும் புதினா உற்பத்தி பரப்பளவு அதிகரித்ததால் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், மார்க்கெட்டில் ஒரு கட்டு புதினா ₹5க்கு விற்பனையாகிறது. இதனால் செலவு செய்த பணத்தை கூட ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

Tags : Hosur ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...