எலச்சிபாளையத்தில் முதல்முறை வாக்களித்த வாக்காளர்கள் உற்சாகம்

திருச்செங்கோடு, டிச.31: இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலையொட்டி, எலச்சிபாளையத்தில் நேற்று முதன்முதலாக வாக்களித்த வாக்காளர்கள் உற்சாகமடைந்தனர். தமிழகத்தில் நேற்று ஊரக உள்ளாட்சி  தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. எலச்சிபாளையம் பகுதியில், வாக்காளர்கள் காலையிலேயே திரண்டு வந்து வரிசையில் நின்று  வாக்களித்தனர். இதில் முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்துடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். திருச்செங்கோடு அருகே குமரமங்கலம் ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், திரளான பெண்கள் வரிசையில் நின்று, தங்கள் வாக்கை பதிவு செய்தனர். முதல்முறை வாக்களித்த கல்லூரி மாணவிகள் உற்சாகமடைந்தனர்.

Related Stories: