×

அரசு பள்ளி வளாகத்தில் டிரான்ஸ்பார்மர்

தர்மபுரி, டிச.31: தர்மபுரி பாலக்கோடு அடுத்த காட்டம்பட்டியில், அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். துவக்கப் பள்ளியாக செயல்பட்டு வந்த நிலையில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்ததால், 3 ஆண்டுகளுக்கு முன், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி, தற்போது 3 கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பள்ளி முகப்பு நுழைவு வாயில் அருகே, ஒரு மின்வாரியத்தின் டிரான்ஸ்பர்மர் மற்றும் மின்மாற்றி உள்ளது. இது, பள்ளி வளாகத்தின் உள்ளே இருப்பதால், மாணவ, மாணவிகள் மின்சார டிரான்ஸ்பார்மரால் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளி விடுமுறை என்பதால், மாணவ, மாணவிகள் நலன் கருதி, பள்ளி வளாகத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்மாற்றியை, பள்ளி திறக்கும் முன்பு வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

Tags : government school campus ,
× RELATED அரசு பள்ளி வளாகத்தில் அடர்காடுகள்...