×

விடுமுறைக்கு பின் திறப்பு டாஸ்மாக் கடையில் முண்டியடித்த குடிமகன்கள்

போச்சம்பள்ளி, டிச.31:உள்ளாட்சி தேர்தல் முடிந்து மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால், டாஸ்மாக்கில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது.உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்தது. கடந்த 3 நாட்களுக்கு முன் மதுகடைகள் மூடப்பட்டதால், வேட்பாளர்கள் டாஸ்மாக்குகளில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். மதுக்கடைகளுக்கு விடுமுறை என்பது பல குடிமகன்களுக்கு தெரியாத நிலையில், தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு வேட்பாளர்கள் கொடுத்த பணத்தை பெற்றுக்கொண்டு மதுக்கடைக்கு சென்றவர்கள் கடைகள் மூடியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதனால், சந்துகடைகளில் அதிக விலை கொடுத்து மது வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முடிந்து, நேற்று மாலை 5 மணிக்கு மீண்டும் கடை திறக்கப்பட்டதால், குஷியான குடிமகன்கள் முண்டியடித்து கொண்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள மது கடைகளில் கூட்டம் அலைமோதியது.

Tags : Citizens ,holidays ,Holiday Task Shop ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...