அரூர் கத்திரிப்பட்டியில் மறு வாக்குப்பதிவு

அரூர், டிச.31: அரூரை அடுத்த கத்திரிப்பட்டியில் மறு வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
அரூர் ஊராட்சி ஒன்றியம், சிட்லிங் கிராம ஊராட்சிக்குள்பட்ட கத்திரிப்பட்டி கிராமத்தில், 452 பெண் வாக்காளர்கள் உள்பட 970 வாக்காளர்கள் உள்ளனர். சிட்லிங் கிராம ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 9பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், கத்திரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி (எண்: 217) கடந்த 27ம் தேதி நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவின் போது, வாக்குச்சீட்டுகளில் 9 வேட்பாளருக்கு பதிலாக 5 வேட்பாளர்களின் சின்னங்கள் மட்டுமே இருந்தது. இந்த ஊராட்சியில் போட்டியிடும் மற்ற 4 வேட்பாளர்களின் சின்னங்கள் விடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று கத்திரிப்பட்டி வாக்குச்சாவடியில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடியில் கம்பாலை, நாட்டான்வளவு, நடுவளவு, கத்திரிப்பட்டி ஆகிய மலைகிராமங்களை சேர்ந்த வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர். இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 970 வாக்குகள் உள்ளன. மறு வாக்குப்பதிவில் 779 வாக்குகள் பதிவாகின. கத்திரிப்பட்டி வாக்குச்சாவடியில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Re-voting ,Aroor Kathiripatti ,
× RELATED மருதூரில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை...