×

அனந்தநாடார் குடி தூய ஜெரோம் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

ஈத்தாெமாழி,டிச.31: அனந்தநாடார்குடி தூய ஜெரோம் கல்லூரியில் வணிக மேலாண்மை துறை சார்பில் பல்துறைப் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.நிலையான வளர்ச்சி அடைய உலக நாடுகளின் சவால்கள் மற்றும் கருத்துக்கள் குறித்த பல்துறை ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்து இக்கருத்தரங்கம் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் தூய பிரான்சிஸ் பல்கலைக்கழக பேராசியர் எம்.செபாஸ்டின் தாமஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
 முனைவர் ஜோசப் ரூபர்ட் வரவேற்றார். கல்லூரி தாளாளர் அருட்பணி சுவக்கின் தலைமையுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.அமல்ராஜ் துவக்கவுரை ஆற்றினார். ஆங்கிலத்துறை பேராசிரியை முனைவர் லீமாரோஸ் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கின் மைய கருத்தை உதவி பேராசிரியர் ஜெ.சகாயசாபு விளக்கி பேசினார். பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் முனைவர் மோகன்ராஜ் நிலையான வளர்ச்சி அடைய சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் இலக்குகள் குறித்த கருத்துகளை விவாதித்தார்.

இக்கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆய்வு கட்டுரைகளை துறை வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். கருத்தரங்கத்தில் 350க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள்  மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் துறை வாரியாக 9 ஆய்வு புத்தகங்களில் வெளியிடப்பட்டது.  பேராசிரியர் பெர்னாஸ்டன் சேவியர் நன்றி கூறினார். கருத்தரங்க நிகழ்ச்சிகளை பேராசிரியைகள் திவ்யா ராஜன் மற்றும் ஜீவிதா ஒருங்கிணைத்தனர்.

Tags : Jerome College ,
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...