×

காரைக்காலில் மூடப்பட்ட அரசு நூற்பாலை மீண்டும் திறப்பு

காரைக்கால், டிச. 31: .காரைக்கால் அடுத்த கீழமனையில் கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டு வரும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அரசு நூற்பாலை மூடப்படுவதும் பின்பு திறக்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாகி விட்டது. அங்கு 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  பணிபுரிகின்றனர். இந்த நூற்பாலையில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் உள்ளதாகவும்  தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பல்வேறு காரணங்களை காட்டி கடந்த சில வாரங்களுக்கு  முன்பு  ஜெயப்பிரகாஷ் நாராயணன் நூற்பாலைக்கு (லேஆப்) தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டது.  இதனால்   நூற்பாலை மூடப்பட்டிருந்தது. லேஆப் முடிக்கப்பட்டு நேற்று முதல் நூற்பாலை இயக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்திருந்தது. தொழிலாளர்கள் பணிக்கு வர வேண்டும் என்று  கேட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் நேற்று தொழிற்சாலை ஊழியர்களுக்கு  கடந்த 2 மாத சம்பளமும், நிலுவையில் உள்ள 24 மாத சம்பளம், 2 ஆண்டு போனஸ் மற்றும் செட்டில்மென்ட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் நேற்று பணி செய்யவில்லை. இது குறித்து கலெக்டர் விக்ராந்த் ராஜா கூறும்போது, நூற்பாலை நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து,  நூற்பாலை லாபகரமாக இயக்குவதற்கும், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

Tags : Government Coffers ,Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...