×

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம், பேரணி

மரக்காணம், டிச. 31:  மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்தும், இந்த சட்டத்தினை திரும்ப பெறவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மற்றும் மரக்காணம் ஒன்றிய அனைத்து ஜமாத்துக்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மரக்காணம் அருகே கூனிமேட்டில் நடந்தது. 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக பாசிச பா.ஜ.க மோடி அரசு கொண்டு வந்த  குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். மதம், மொழி வேறுபாட்டால் நாட்டை துண்டாக்க நினைக்கும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் தேசிய கொடி ஏந்தி கண்டனக்கோஷங்கள் எழுப்பினர்.

 சங்கராபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்தினை திரும்ப பெற கோரி சங்கராபுரத்தில் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் பொது கூட்டம் நடைபெற்றது. சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் செல்லும் சாலையில் இருந்து சங்கரா
புரம் பேருந்து நிலையம் வரை சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். பின்னர் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், விடுதலைச்சிறுத்தை கட்சி மாநில பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன், தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை சையத், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அப்துல்
பாசித், பாப்புலர் மாநில செயலாளர் நாகூர்மீரான், மாநில செயற்குழு உறுப்பினர் ஷபிக்அகமது, திமுக மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு, எதிர்ப்புரையாற்றினர். இதில் சரவணன், ஏழுமலை, தமிழ்மாறன், பாஸ்கர், குமரன், சாருன், முஜிபுர்ரகுமான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெண்கள் உட்பட 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : Fight for Citizenship Amendment ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை