×

எல்லை மறுவரையறையில் கள்ளக்குறிச்சியில் சேர்த்ததற்கு 3 கிராமங்கள் எதிர்ப்பு

விழுப்புரம், டிச. 31:  எல்லை மறுவரையறையின் போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட டி.கொடியூர், குன்னத்தூர், வீரணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது கிராமம் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. தற்போது வரையறை பிரிக்கப்பட்ட போதும் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா எல்லையிலும், விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்டதாகவும் எங்களது கிராமத்தை சேர்த்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்நிலையில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பொதுமக்களின் விருப்பத்தை கேட்காமலும் முன்னரே மறுவரைறையை செய்து விழுப்புரம் மாவட்டத்தில் சேர்த்த பிறகும் எங்கள் கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்துள்ளதாக தெரியவருகிறது. திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் தான் எங்களது கிராமம் இருக்கிறது. விழுப்புரம் அருகாமையிலும், கள்ளக்குறிச்சி 60 கி.மீ தொலைவிலும் உள்ளது. எனவே எங்களுக்கு நிர்வாக சிக்கலும் ஏற்படும். எனவே ஆட்சியர் நடவடிக்கை எடுத்து விழுப்புரம் மாவட்டத்திலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : villages ,border redevelopment ,
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு