×

அடுத்தடுத்து தீக்குளிப்பு சம்பவங்கள்

விழுப்புரம், டிச. 31:     விழுப்புரம் ஆட்சியர் முன்பு அடுத்தடுத்து தீக்குளிப்பு சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.  விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆட்சியர் அண்ணாதுரை, அமைச்சர் நிகழ்ச்சியில் பங்குபெற்று விட்டு காலை அலுவலகத்திற்குள் நுழைந்தார். அப்போது அவரது முன்னிலையில் விழுப்புரம் மாவட்டம் வாழப்பட்டாம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் தனது மகள் ஓவியா, மகன் யுவராஜ் ஆகியோருடன் சென்று உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். சற்றும் எதிர்பாராத ஆட்சியர் அவர்களை தடுத்துநிறுத்தி விசாரணை நடத்தினார். அதற்குள் அங்கு விரைந்த வந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திகேயன் கூறுகையில், விழுப்புரம் மாவட்டம் அரவிந்தா ஆசிரமத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தேன். கடந்த மக்களவை தேர்தலின் போது விடுமுறை அளிக்காததால், தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டேன். தற்போது அதனை தெரிந்து கொண்ட ஆசிரமத்தின் மேலாளர் என்னை பணிநீக்கம் செய்துவிட்டார்.
 வேலைக்கு போக முடியாததால் எனது குடும்பம் வறுமையில் உள்ளது. பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. எனவே ஆட்சியர் நடவடிக்கை எடுத்து எனக்குரிய நஷ்டஈடும், திரும்பவும் வேலையை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார்.

தொடர்ந்து மனுக்களை பெற்றுக்கொண்ட போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். தற்கொலைக்கு முயன்றதாக வழக்குபதிந்துஅவரை கைது செய்தனர்.  இதேபோல் வி.சாத்தனூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(60) என்பவர் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றிதீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் கூறுகையில், பக்கத்து நிலத்துக்காரரிடம் எனக்கு சொந்தமான சிறிதளவு நிலத்தை குத்தகைக்கு விட்டிருந்தேன். இரண்டு, மூன்று ஆண்டுகள் போன நிலையில் தற்போது பட்டா வாங்கியுள்ளதால் சொந்தபயன்பாட்டிற்கு நிலத்தை திருப்பி ஒப்படைக்குமாறு ட்டதற்கு அவர் கொடுக்க முடியாது என சொந்தம் கொண்டாடுகிறார். விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் புகார்அளித்தபோது, போலீசார் எதிர்தரப்பின ரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவருக்கு சாதகமாக என்னை போனில்தொடர்பு கொண்டு மிரட்டுகிறார்கள். இதனால் வேறுவழியில்லாமல் தற்ெகாலைக்கு முயன்றதாக கூறினார். ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து தற்கொலை முயற்சி சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கிருஷ்ணமூர்த்தியையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : fire incidents ,
× RELATED பவானி சுற்று வட்டாரத்தில் கொளுத்தும்...