×

கோவில்பட்டி மார்க்கெட்டில் இலவச நவீன கழிப்பிட வசதி

கோவில்பட்டி, டிச. 31: கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் இலவச நவீன கழிப்பிட வசதி செய்துதர வேண்டும்என சிறு வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட் சிறுவியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் செந்தூர்பாண்டியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜேசுதாசன் வரவேற்றார். கூட்டத்தில் நகராட்சி தினசரி மார்க்கெட்டிலில்உள்ள கடைகள் வாடகை நிர்ணயம் செய்யும்போது வார்டு எண் 24ல் உள்ள நகர பஸ்நிலைய பகுதிக்கு உரிய அரசு நிர்ணயிக்கப்பட்ட நில மதிப்பீட்டின்படி வாடகை மிகவும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை வார்டு எண் 4 பகுதிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட நில மதிப்பீட்டின்படி கடை வாடகையினை மறு நிர்ணயம் செய்ய வேண்டும்.

 மழை காலங்களில் பெருக்கெடுக்கும் தண்ணீர் கடைகளுக்குள் செல்லும் நிலையை தடுக்க ஏதுவாக மார்க்கெட்டிற்குள் வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும். வடக்குப் பகுதியில் உள்ள பெரிய கடைகளுக்கு முன்பாக நடுரோட்டில் வாறுகாலினை கடைகளுக்கு முன்பாக அமைக்க வேண்டும். மார்க்கெட்டில் பாதையின் நடுவில் உள்ள மின்கம்பங்களை முறையாக அகற்றி சாலையோரம் அமைக்க வேண்டும். மார்க்கெட் கடைக்காரர்கள், உரிமையாளர்களுக்கு தேவையான குடிநீர்மற்றும் கடை உரிமைதார் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இலவச நவீன கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணைத் தலைவர் கனகசபாபதி மற்றும் தினசரி மார்க்கெட் சிறுவியாபாரிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : Modern Toilet Facility ,Kovilpatti Market ,
× RELATED கோவில்பட்டி மார்க்கெட்டில் வாகன நுழைவு கட்டண பட்டியல்