×

குளத்தூர்- கீழவைப்பார் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்

குளத்தூர், டிச. 31:  குளத்தூர்   கிழக்கு கடற்கரை சாலையில் இருந்துது கீழவைப்பார் செல்லும் சாலை உள்ளது.   இச்சாலையோரம் கடந்த சில ஆண்டுகளாக குளத்தூர் தெற்கு மற்றும் மேற்கு பகுதி,   குளத்தூர் காலனி ஆகிய பகுதிகளில் ஊராட்சி நிர்வாகத்தினரால் சேகரிக்கப்படும்   குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு நாளுக்குநாள் அப்பகுதியில் கொடட்டப்பட்ட  குப்பைகள் மலைபோல் குவிந்து தேங்கி கிடக்கின்றன.    மேலும் குப்பைகளை  ஒதுக்குப்புறமாக  கொட்டுவதற்கு பதில் சாலையிலேயே கொட்டிச்செல்கின்றனர். இதனால்  அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு.  கொசுத்தொல்லை மற்றும்  விஷவண்டுகளின் அச்சுறுத்தல் அப்பகுதி பொதுமக்களை  சிரமப்படுத்திவருகிறது.  மேலும் இதுகுறித்து  பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் பாராமுகமாகவே உள்ளனர். இதனால் குளத்தூர்  கிழக்குப் பகுதியில்  வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் சாலையில் குவிந்துகிடக்கும் குப்பைகளை உடனடியாக  அகற்ற துரித  நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags : road ,Klathoor - Keezhivarpar ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை