×

கேரளாவுக்கு ஒன்றரை கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

செங்கோட்டை,டிச.31: தென்காசியிலிருந்து கோட்டயம் சென்ற கேரள அரசு பேருந்தில் ஒன்றரை கிலோ கஞ்சாவை கேரள கலால் சோதனை சாவடியினரால் பறிமுதல் செய்யப்பட்டது.தென்காசியிலிருந்து கோட்டயம் சென்ற கேரள அரசு பேருந்தில் ஆரியங்காவு கலால் சோதனை சாவடியினர் நேற்று முன்தினம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது , தேனி கம்பம் நகரை சேர்ந்த மாசானம் என்பவர் ஒன்றரை கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி சென்றது கண்டு பிடிக்கபட்டது.  இதையடுத்து அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தேகாஷி-கோட்டயம் கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைதான மாசானம் இரு மாநிலங்களுக்கு இடையேயான கஞ்சா கடத்தல் கும்பலின் முக்கிய நபராக இருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் ஆரியங்காவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.டிரைவர் மீது தாக்குதல் நாங்குநேரி, டிச.31: மூலைக்கரைபட்டி அருகே முனைஞ்சிபட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி மகன் இசக்கிராஜா(29). கார் டிரைவர். கடந்த சில நாட்களுக்குமுன் அங்கு நடந்த கோயில் திருவிழாவில் சாமி ஆடுவது தொடர்பாக இசக்கிராஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்தநயினார் மகன் ராமையா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ராமையா, கல்லால் இசக்கிராஜாவை தாக்க முயன்றதுடன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின்பேரில் மூலைக்கரைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் செல்வின்ஐசக் ஞானதாஸ் வழக்கு பதிந்து ராமையாவை தேடி வருகிறார்.

Tags : Kerala ,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு