×

கடம்பன்குளம் பாலவிநாயகர் ஐயப்பன் கோயிலில் பூக்குழி திருவிழா

நாங்குநேரி, டிச.31: மூலைக்கரைப்பட்டி அருகே கடம்பன்குளத்தில் பால விநாயகர், ஐயப்பசாமி கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன்குளம் பாலவிநாயகர் மற்றும் ஐயப்பன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 28ம் தேதி இரவு 7 மணி அளவில் சிறப்பு திருவிளக்கு பூஜை மற்றும் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பாலவிநாயகர் மற்றும் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு மகா கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை பூஜை இடம் பெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம், இரவு பூக்குழி இறங்குதல் வைபவம் நடந்தது. நிகழ்ச்சியில் காப்பு கட்டி விரதம் இருந்த ஆண், பெண் பக்தர்கள் பலர் பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து இரவு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உள்ளூர், வெளியூரைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் அறங்காலவர் குழு தலைவர் சுப்பையா மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags : Pookkuli Festival ,Kadambankulam Palaviyanayar Iyyappan Temple ,
× RELATED சிவகிரியில் பைக்கில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்