×

கீழப்புலியூரில் இந்துக்களின் சங்கமம் நிகழ்ச்சி

தென்காசி, டிச.31: தென்காசியை அடுத்த கீழப்புலியூரில் நெல்லை மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் தெய்வீக தமிழை காக்க இந்துக்களின் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். மாவட்ட வக்கீல் அணி தலைவர் சாக்ரடீஸ் சிறப்புரையாற்றினார். முன்னாள் கவுன்சிலர்கள் கருப்பசாமி, சங்கரசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், நகர இந்து முன்னணி தலைவர் இசக்கிமுத்து, நகர பொது செயலாளர் நாராயணன், நகர செயலாளர் மாதேஷ், ராஜா, இந்து முன்னணி ஆட்டோ சங்க தலைவர் முருகன், நாராயணன், சங்கர ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Hindus ,confluence event ,Keezhupaliyur ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...