×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளத்தில் மிதக்கும் மேடை அமைக்கும் பணி

கோவை, டிச.30:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை வாலாங்குளத்தில் மிதக்கும் மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 9 குளங்கள் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மேம்படுத்தப்படுகின்றன. உக்கடம் பெரிய குளத்தின் வடதுபுறம், செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள குளக்கரை பலப்படுத்தப்பட்டு நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு பூங்கா, ஓய்வெடுக்கும் பகுதி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
முத்தண்ணன் மற்றும் செல்வம்பதி குளத்தை இணைத்து ஒரே பணியாக 31.25 கோடி ரூபாயிலும், சிங்காநல்லுார் குளத்தில் 12.55 கோடி ரூபாயிலும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனையில் இருந்து வாலாங்குளம் செல்லும் பகுதியில் 23.78 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.

வாலாங்குளம் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் 23.52 கோடியில் ‘வைபை’ வசதியுடன் கூடிய கலந்துரையாடல் கூடம், உணவுக்கூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. குளத்தின் அழகை ரசிக்க மிதக்கும் மேடையும் அமைக்கப்படுகிறது. ‘புளோட்டிங் ஜெட்டி’ எனப்படும் மிதக்கும் மேடை, செவ்வக வடிவில் சிறு, சிறு அமைப்பாக இணைத்து உருவாக்கப்படுகிறது. மழைக்காலத்தில் வழுக்கி விபத்து ஏற்படாத வகையில் கயிறு மற்றும் இரும்பு போல்ட் பொருத்தியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வாலாங்குளத்தின் அழகை ரசிக்க ‘புளோட்டிங் ஜெட்டி’ எனும் மிதவை மேடை அமைக்கப்படுகிறது. வாலாங்குளத்தின் குறுக்கே ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்ல ஏதுவாக இணைப்பு பாலம் அமைக்கப்படுகிறது என்றனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...