×

பிளஸ் 1 பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு வரும் 2,3ம் தேதிகளில் தட்கல் விண்ணப்பம்

கோவை,டிச.30:நடப்பு கல்வியாண்டிற்கான பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் வரும் ஜனவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.இது குறித்து அரசு தேர்வுகள் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வரும் மார்ச் மாதம் நடக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கோழ் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

 ஏற்கனவே பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள் மார்ச் மற்றும் ஜூன் மாதம் நடக்கும்  தேர்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம். தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்காக கோவை மாவட்டத்தில் 8 சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையில் அசோகபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜ வீதி துணிவணிகர் சங்க மகளிர் மேல்நிலைப்பள்ளி, சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 நான்கு இடங்களிலும், பொள்ளாச்சியில் நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் தனித்தேர்வர்கள் வரும் 2 மற்றும் 3 தேதிகளில் நேரில் சென்று ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு மீண்டும் தேர்வு எழுதுபவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணமாக ரூ.35, ஆன் லைன் பதிவுக்கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். நேரடி தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணமாக ரூ.150, இதர கட்டணமாக ரூ.35, பதிவு கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். இருவகை தேர்வர்களும் இத்துடன் தட்கல் கட்டணமாக ரூ. ஆயிரத்தை சேர்த்து செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்களுக்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். நுழைவு சீட்டு வெளியிடப்படும்போது ஒப்புகை சீட்டில் உள்ள எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...