×

எல்லையோர கிராமங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் சென்றன

மஞ்சூர், டிச.30: உள்ளாட்சி தேர்தலையொட்டி எல்லையோர கிராமங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி அமைப்புகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு முதற் கட்டமாக குன்னூர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக ஊட்டி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. மஞ்சூர் அருகே உள்ள குந்தா, முள்ளிகூர், பாலகொலா உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் நேற்று ஓட்டுப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

குந்தா ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளது. இதில் இரியசீகை, கிண்ணக்கொரை, கோரகுந்தா தாய்சோலை ஆகிய பகுதிகள் தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதிகளை ஒட்டிய கேரளா வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதால் இங்குள்ள உள்ள 6 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கருதப்படுகிறது. இதையடுத்து தேர்தலையொட்டி இந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் கூடுதல் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : border villages ,
× RELATED ஆந்திராவில் ஊருக்குள் புகுந்த 70...