×

ஆஞ்சநேயர் ஜெயந்தி காவிரி ஆற்றில் அனுமன் சிலை கரைப்பு

ஈரோடு,டிச.30: ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் அனுமன் சிலை கரைக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சி ஸ்ரீஅனுமன் பக்தர்கள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி ஈரோடு அருகே முள்ளாம்பரப்பில் 4 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 25ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி சிலை வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து 28ம் தேதி மாலை 4 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. தினசரி ஆஞ்சநேயர் வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று ஸ்ரீஆஞ்சநேயர் ஆன்மீக விசர்ஜன ஊர்வலம் நடந்தது. முள்ளாம்பரப்பில் இருந்து ஆஞ்சநேயர் சிலை வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

 இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணி தலைவர் ஸ்ரீனி கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஆஞ்சநேயர் சிலை ஊர்வலம் முள்ளாம்பரப்பில் இருந்து ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயர் சிலையை காவிரி ஆற்றில் பக்தர்கள் கரைத்தனர். தொடர்ந்து 4வது ஆண்டாக ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டு வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : meltdown ,Anjaneyar Jayanti ,Cauvery River ,
× RELATED மோகனூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை