×

பவானியில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் நிறைவு

பவானி,டிச.30: பவானி ஊராட்சி ஒன்றியத்தில் 15 கிராம ஊராட்சி தலைவர்கள், 150 வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் 17 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 184 பதவிகள் உள்ளன.பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 42,617 பேரும், பெண் வாக்காளர்கள் 44,386 பேரும் என மொத்தம் 87,103 பேர் உள்ளனர். இப்பதவிகளுக்காக நடைபெறும் தேர்தலுக்கு 133 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், குருப்பநாயக்கன்பாளையம் ஒரிச்சேரிப்புதூர், புன்னம், சின்னமேட்டூர் ஆகிய வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இதில் வார்டு உறுப்பினர்களாக 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் இதைத்தொடர்ந்து பாக்கியுள்ள 171 பதவிகளுக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடிகளுக்கு வேன்கள் மூலம் நேற்று தேர்தல் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிசிடிவி விமானம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : elections ,Bhavani ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...