×

சென்னிமலை ஒன்றியத்தில் வேட்பாளர் அடையாள அட்டை கிடைக்காமல் 100 பேர் தவிப்பு

சென்னிமலை.டிச.30;  சென்னிமலை ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் தங்களது அடையாள அட்டை கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகினர்.சென்னிமலை ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு இரண்டுக்கு 10 பேரும், யூனியன் வார்டு 14க்கு 72 பேரும், ஊராட்சி தலைவர் பதவி 22க்கு 79 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் 186க்கு 337 பேரும் ஆக  மொத்தம் 488 பேர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு நேற்று இரவு 10 மணி வரை வேட்பாளர் அடையாள அட்டையும், முகவர் அடையாள அட்டையும் வழங்கப்படாததால் அனைத்து வேட்பாளர்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டு வந்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், இரவு வரை அடையாள அட்டை கிடைக்காமல் வேட்பாளர்கள் தடுமாறியது பதற்றத்தை ஏற்படுத்தியது. சென்னிமலை ஒன்றியத்தில்  வேட்புமனுத்தாக்கல் முதலே இந்த குளறுபடிகள் தொடர்ந்து வந்ததால் வேட்பாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். சென்னிமலை போலீசார் இரவு முழுவதும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED 10 மற்றும் 12 ஆம் வகுப்பு...