திருவொற்றியூரில் நாதஸ்வரம், தவில் இன்னிசை கச்சேரி: திமுக எம்பி பங்கேற்பு

திருவொற்றியூர், டிச. 30: திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள தனியார் திருமண மாளிகையில், மார்கழி மாதத்தை முன்னிட்டு நாதஸ்வரம், தவில் இன்னிசை கச்சேரி நடந்தது. பிரபல தவில் வித்வான் முருகேசன் தலைமை வகித்தார். திமுக கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு வரவேற்றார். விழா குழு நிர்வாகிகள் ஆசைத்தம்பி, சைலஸ் முன்னிலை வகித்தனர். திமுக எம்பி கலாநிதி வீராசாமி, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர்.

இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து 12 மணி நேரம் நாதஸ்வரம், தவில் இசையை வாசித்தனர். இந்த விழாவின்போது நாதஸ்வர வித்வான்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன், வழக்கறிஞர் பொன்னிவளவன், பகுதி இலக்கிய அணி அமைப்பாளர் நித்யாதாசன், வியாபாரிகள் சங்க தலைவர் ஆதிகுருசாமி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: