×

வன்னியர் குல சங்கக் கூட்டம்

ஆலந்தூர், டிச. 30: வன்னியர் குல சத்ரிய மகா சங்கத்தின் 131ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆலந்தூர் பகுதியில் உள்ள பாடசாலையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் எஸ்.லிங்கமூர்த்தி தலைமை வகித்தார். துணை தலைவர் ஹரி ராமன், செயலாளர்கள் கணேசன், மணவாளன், பொருளாளர் பகத்சிங் முன்னிலை வகித்தனர். குழு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஐஜி அறிவுச்செல்வன் கலந்துகொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.  இதையடுத்து மறைந்த ஏ.கே.நடராஜன், ஆர்.மார்க்கபந்த், டாக்டர் ஜெயச்சந்திரன், சுதந்திர போராட்ட தியாகி ராமையா ஆகியோரின் திருஉருவ படங்கள் திறந்து வைக்கப்பட்டது.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திண்டிவனம் ராமமூர்த்தி, வழக்கறிஞர் அண்ணாமலை, பேராசிரியர் ராமகிருஷ்ணன், மகா சங்க பொதுக்குழு உறுப்பினர் பூபாலன், மக்கள் பொதுசேவை மைய தலைவர் மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Vannier ,clan association meeting ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்