கடத்தூர் அருகே 5 ஆண்டாக பூட்டி கிடக்கும் துணை சுகாதார நிலையம்

கடத்தூர், டிச.30: கடத்தூர் ஒன்றியம் வகுத்துப்பட்டி கிராமத்தில், 5 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர் ஒன்றியம் வகுத்துப்பட்டி கிராமத்தில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் மருத்துவ தேவைக்காக, கடந்த 25 ஆண்டுக்கு முன் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், இந்த துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், இங்கு பணியாற்றி வந்த செவிலியர், பதவி உயர்வு பெற்று வேறு இடத்திற்கு சென்று விட்டார். அவருக்கு பதிலாக புதிதாக செவிலியர் நியமிக்கப்படாததால், கடந்த 5 ஆண்டுகளாக, சுகாதார நிலையம் பயன்பாடின்றி பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள், சிகிச்சை பெறுவதற்கு 10கி.மீ தொலைவில் உள்ள கடத்தூர், ராமியணஅள்ளிக்கு சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, துணை சுகாதார நிலையத்தில் செவிலியர்களை நியமித்து, மீண்டும் பயன்பாட்டிற்கு திறக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>