இலவச மருத்துவ முகாம்

தர்மபுரி, டிச.30:  தர்மபுரி பிசியோதெரபி சங்கம் சார்பில், இலவச பிசியோதெரபி மற்றும் எலும்பில் கனிமதாது பரிசோதனை மருத்துவ முகாம், நேற்று தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். முகாமில், பிசியோதெரபி மருத்துவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு பரிசோதனையும், சிகிச்சையும் மற்றும் ஆலோசனையும் வழங்கினர். முகாமில், மூட்டின் செயல்பாட்டை கண்டறிதல், மூட்டுவலி, இடுப்புவலி, கழுத்து மற்றும் குதிகால் வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் இருந்து கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

Tags : Free Medical Camp ,
× RELATED இளையரசனேந்தலில் இலவச மருத்துவ முகாம்