×

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

ராஜபாளையம், டிச. 30: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நேற்று நடைபெற்றது. இதில் ராஜபாளையம் பகுதியில் 214 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குப் பெட்டிகளை ராஜபாளையம் சேத்தூர் சேவுக பாண்டிய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 287 வாக்குப்பெட்டிகள் மூன்று அறைகளில் வைக்கப்பட்டு அறைகள் சீல் வைக்கப்பட்டது.

மாவட்ட திட்ட இயக்குனர் சுரேஷ், உதவி தேர்தல் அலுவலர் சங்கரநாரயணன், ஊராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வகுமார் ஆகிய மூன்று பேரும் தனித்தனியே சீல் வைத்தனர். தொடர்ந்து ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசுந்தர் தலைமையில் நான்கு இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறை முன்பும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். வருகின்ற இரண்டாம் தேதி வாக்கு எண்ணுவதால் அந்தப் பகுதிக்குள் யாரையும் போலீசார் அனுமதிக்காமல் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...