×

ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் 2,146 போலீசார்

விருதுநகர், டிச.30:  இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான 6 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடக்கும் 1,114 வாக்குச்சாவடிகளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்ட நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது. அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர் ஆகிய 6 ஒன்றியங்களில் 1,504 பதவிகளுக்கு போட்டிகள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 10 பதவிகளுக்கு 59 பேரும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் 97 பதவிகளுக்கு 425 பேரும், ஊராட்சி தலைவர் 242 பதவிகளுக்கு 853 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் 1,155 பதவிகளுக்கு 3,060 பேரும் ஆக 1,504 பதவிகளுக்கு 4,397 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1,114 வாக்குசாவடிகளில் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 80,021 வாக்காளர்கள், விருதுநகர் ஒன்றியத்தில் 1,36,073 வாக்காளர்கள், காரியாபட்டி ஒன்றியத்தில் 58,917 வாக்காளர்கள், திருச்சுழி ஒன்றியத்தில் 69,012 வாக்காளர்கள், நரிக்குடி ஒன்றியத்தில் 61,359 வாக்காளர்கள், சாத்தூர் ஒன்றியத்தில் 83,481 வாக்காளர்கள் என மொத்தம் 4,88,863 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 6 ஒன்றியங்களில் உள்ள 1,114 வாக்குச்சாவடிகளில் 9,171 ஆயிரம் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு தேவையாக வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் தேர்தல் அலுவலர்கள் நேற்று மாலை சென்று சேர்ந்தனர். வாக்குப்பதிவு நடைபெறும் மையங்கள் மற்றும் வாக்குச்சாவடி பகுதியை சுற்றிய பகுதிகளில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் 2,146 போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Tags : policemen ,round ,
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்