மாட்டுப்பட்டி பகுதியில் ஆபத்தான சாலையால் வாகன ஓட்டுனர்கள் பீதி

மூணாறு, டிச.30:மூணாறில் முக்கிய சுற்றுலாத் தலமான மாட்டுப்பட்டி பகுதியில் ஆபத்தான சாலைகளால் வாகன ஓட்டுனர்கள் பீதி அடைந்துள்ளனர்.
மூணாறில் முக்கிய சுற்றுலாத் தலமாக மாட்டுப்பட்டி உள்ளது. தற்போது மாட்டுப்பட்டி பகுதியில் உள்ள எக்கோ பாயிண்ட், குண்டலை அணை, போட்டோ பாயிண்ட் ஆகிய பகுதிகளைப் பார்வையிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.இந்த நிலையில் மாட்டுப்பாட்டியில் இருந்து குண்டலை செல்லும் சாலை ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

இப்பகுதியில் பெய்த கனமழையால் குண்டலை செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக சாலையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் பீதியுடன் இந்த சாலையை கடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.மூணாறில் இருந்து மாட்டுப்பட்டி வழியாக வட்டவடை வரை சாலை பணிகளுக்காக 1 கோடி ரூபாய் எம்எல்ஏ நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டும், சாலையை சீரமைக்க அதிகாரிகள்அலட்சியம் காட்டி வருகின்றனர். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் காணப்படும் இந்த சாலையில் இரவு நேரங்களில் எஸ்டேட் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான மாட்டுப்பட்டி சாலையின் இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,road ,
× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது