காரைக்குடியில் டெய்லர் கொலையில் வாலிபர்கள் இருவர் கைது

காரைக்குடி, டிச.30: காரைக்குடி செஞ்சை புளியமரத்தடி பகுதியில் தையல் கடை நடத்தி வந்தவர் செல்வராஜ் (50). இவருக்கு திருமணமாகி சின்னபொண்ணு என்ற மனைவியும், ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர். செல்வராஜ் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை இல்லாமல் தனியாக வசித்துவந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 16ம் தேதி இரவு 10 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மறுநாள் காலை  பழைய செஞ்சை காட்டம்மன் கோவில் அருகில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சோமனாதபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில். கல்லல் குருந்தம்பட்டை சேர்ந்த சண்முகவேல்(24),, செஞ்சை பொசலான் (22) என்பவரும் சேர்ந்து கஞ்சாவிற்காக செல்வராஜை தலையில் அடித்ததில் அவர் இறந்துள்ளனர். இதன் பின் இருவரும் சேர்ந்து செல்வராஜ் கழுத்தையும் அறுத்து கொன்றது விசாரணையில் தெரிய வந்தது.  அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More