×

டிஆர்இயூ தொழிற்சங்கம் எதிர்ப்பு முசிறி, தொட்டியம், தா.பேட்டை ஒன்றியங்களில் தயார்நிலையில் 465 வாக்குச்சாவடி மையங்கள்

முசிறி, டிச.30: முசிறி, தா.பேட்டை, தொட்டியம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கு 465 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 32 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளது. முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் 162 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 14 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகளில் 16 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 64 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் வரைவு பட்டியலின்படி மொத்தம் 84 ஆயிரத்து 281 வாக்காளர்கள் உள்ளனர்.

தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளில் 171 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொட்டியத்தில் 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதில் 9 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய ஒன்றியத்தில் 90,396 வாக்காளர்கள் உள்ளனர். தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 25 ஊராட்சிகளில் 132 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பத்து மண்டலங்களாக மையங்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் 7 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. தா.பேட்டை ஒன்றியத்தில் மொத்த வாக்காளர்கள் 67,911 பேர் உள்ளனர். மேலும் தேர்தல் பணியாற்றுவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ள தேர்தல் அலுவலர்கள் தங்களுக்கான பணி ஆணையை பெற்று ஆணையில் குறிப்பிட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று தங்களது பொறுப்பை ஏற்றுள்ளனர்.

மாற்று தேர்தல் அலுவலர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய தலைமை அலுவலகங்களில் தயார் நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 77 வகை பொருட்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் வாக்குச்சாவடி மையங்களுக்கு ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 36 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்க உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சுற்றிச் சுழன்று தங்களுக்கான வாக்குகளை தக்க வைக்கும் இறுதி முயற்சியில் ஈடுபட்டனர். இது தவிர வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : polling centers ,union ,anti-Mussiri ,Thampet ,Thottiyam ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!