×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்க காளைகளுக்கு பயிற்சி

சேலம், டிச.30: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்க காளைகளை தயார் செய்யும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது, கிராமப் புறங்களில் ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வீரவிளையாட்டுகள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதில், ஜல்லிக்கட்டு மதுரை அலங்காநல்லூர், திருச்சி, பாலமேடு, துறையூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கூலமேடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், சேலம், நாமக்கல் உள்ளிட்ட உள்ள நிலையில், ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்கும் காளைகளை தயார் செய்யும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இதுகுறித்து இளைஞர்கள் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்கும் காளைகளுக்கு பயிற்சி அளிப்போம். தினசரி 2 முதல் 3 மணி நேரம் வரை காளைக்கு பயிற்சி அளிக்கப்படும். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகளவில் காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதேபோல், பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்கள், ரேக்ளா பந்தயத்திற்கு காளைகள் தயார் செய்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு காணும் பொங்கல் தினத்தன்று, ஆத்தூரில் நடக்கவுள்ள ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்பதற்காக காளைகளுக்கு காலை, மாலை என இருவேளையும் பயிற்சி அளித்து வருகிறோம்,’ என்றனர்.

Tags : race ,Bulls ,Pongal Festival ,
× RELATED அரிமளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டி