×

ராசிபுரத்தில் ஆழ்கடல் அதிசயம் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி

ராசிபுரம், டிச.30:செல்லப்பம்பட்டி லட்சுமி டைல்ஸ் அண்ட் டோர்ஸ் மற்றும் பிக் ஷோ ஈவண்ட்ஸ் இணைந்து வழங்கும் ஆழ்கடல் அதிசயம், மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை, வரும் ஜனவரி 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் சதீஸ்குமார் கூறியதாவது: இக்கண்காட்சியில், 50 வகை உணவுகளின் அறுசுவை அணிவகுப்புடன் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த மேஜிக் ஷோ, பேய் வீடு, குழந்தைகளுக்கான படகு சவாரி, ஜம்பிங் பலூன், விளையாட்டரங்கம், 3டி ஷோ உள்ளிட்ட அனைத்தும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. கண்காட்சியில் தினந்தோறும் கலந்து கொள்ளும் முதல் 1000 நபர்களுக்கு, ₹15 மதிப்புள்ள மணக்காடு மசாலா (அ) கீ செயின் (அ) மரக்கன்று (அ) 2020ம் வருட காலண்டர் (அ) மெஹந்தி என எக்கச்சக்க பரிசுகள் காத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Deep Sea Wonder Household Exhibition ,
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு