×

குமாரபாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

குமாரபாளையம், டிச.30: குமாரபாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. குமாரபாளையம் நகராட்சி முருங்கைக்காடு அரசு தொடக்கப்பள்ளியில், இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவர் சித்ரா தங்கவேல் தலைமையில், நடராஜா பல்துறை மருத்துவர் குழுவினர் நோயாளிகளை பரிசோதனை செய்தனர். இதில் மகப்பேறு, கண் சிகிச்சை, பல் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் 300 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. மருத்துவ முகாமை நடராஜா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா துவக்கி வைத்தார். நகர பாஜக தலைவர் ராஜ் (எ) பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Free General Medical Camp ,Kumarapalayam ,
× RELATED சிட்டு குருவிகளுக்கு உணவு அளிக்க மாணவிகள் உறுதி