×

வேதாரண்யத்தில் அமைதியாக தேர்தல் நடக்க வாக்கு பெட்டிகளுக்கு பூஜைசெய்து வாக்குசாவடிகளுக்கு அனுப்பிவைப்பு

வேதாரண்யம், டிச.30: வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுவதைமுன்னிட்டு வாக்குப்பெட்டிகளுக்கு அதிகாரிகள் சிறப்பு பூஜை செய்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். வேதாரண்யம் தாலுக்காவில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நடைபெற்ற பிரசாரம் நிறைவடைந்தது. வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த 200 வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப்பெட்டி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அனுப்பிவைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

முன்னதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் ஓட்டுப்பெட்டி மற்றபொருட்களை வைத்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் செல்வராஜ், கஸ்தூரி மற்றும் தேர்தல் சிறப்பு அதிகாரிகள் வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வர்ஜினியா, வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளுக்கு சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து மாலை அணிவித்து கற்பூரம் ஏற்றிபூஜை செய்தனர். பின்பு வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்குச்சாவடிக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அதிகாரிகள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வாக்குப்பெட்டிகள் அனைத்து பத்திரமாக மீண்டும் வந்துசேர வேண்டும் எனவும் இறைவனை பிரார்த்தனை செய்துவாக்கு பெட்டிகளை அனுப்பி வைத்தனர்

Tags : polling stations ,elections ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...