×

டிஆர்இயூ தொழிற்சங்கம் எதிர்ப்பு முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட 19,339 பெண்கள் கூடுதலாக வாக்களிப்பு

நாகை, டிச.30: நாகை மாவட்டத்தில் நடந்து முடிந்த முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடந்தது. இதில் நாகை ஊராட்சி ஒன்றியத்தில் 31,510 ஆண்களில் 24,102 பேர் வாக்களித்துள்ளனர். 32,937 பெண்களில் 26,551 பேர் வாக்களித்துள்ளனர். இதர வாக்காளர்கள் 5 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. ஆக மொத்தம் 64 ஆயிரத்து 452 50,653 பேர் வாக்களித்துள்ளனர். இது 78.59 சதவீதம் ஆகும். அதேபோல் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஆயிரத்து 578 ஆண்களில் 24,533 பேர் வாக்களித்துள்ளனர். 34,203 பெண்களில் 27,338 பேர் வாக்களித்துள்ளனர். இதர வாக்காளர்கள் 1 பேரில் ஒருவர் வாக்களித்துள்ளார். ஆக மொத்தம் 66,782 51,872 பேர் வாக்களித்துள்ளனர். இது 77.67 சதவீதம் ஆகும்.

அதே போல் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் 26,431 ஆண்களில் 21,253 பேர் வாக்களித்துள்ளனர். 27,331 பெண்களில் 22,619 பேர் வாக்களித்துள்ளனர். இதர வாக்காளர்கள் ஒரு பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. ஆக மொத்தம் 53,763 வாக்காளர்களில் 44,072 பேர் வாக்களித்துள்ளனர். இது 81.97 சதவீதம் ஆகும். அதேபோல் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 50,481 ஆண்களில் 36,904 பேர் வாக்களித்துள்ளனர். 51,746 பெண்களில் 40,150 பேர் வாக்களித்துள்ளனர். இதர வாக்காளர்கள் 4 பேரில் 3 பேர் வாக்களித்தனர். ஆக மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 231 பேர்களில் 77,057 பேர் வாக்களித்துள்ளனர். இது 75.38 சதவீதம் ஆகும்.

அதேபோல் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் 69,809 ஆண்களில் 48,872 பேர் வாக்களித்துள்ளனர். 70,653 பெண் 54,384 பேர் வாக்களித்துள்ளனர். இதர வாக்காளர்கள் ஒருவர் கூட இல்லை. ஆக மொத்தம் 1 லட்சத்து 40,462 பேர்களில் 1 லட்சத்து 3,256 பேர் வாக்களித்துள்ளனர். இது 73.51 சதவீதம் ஆகும். அதேபோல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் 55,285 ஆண்களில் 38,822 பேர் வாக்களித்துள்ளனர். 56,130, பெண்களில் 42,583 பேர் வாக்களித்துள்ளனர். இதர வாக்காளர்கள் 3 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. ஆக மொத்தம் 1 லட்சத்து 11,418 பேர்களில் 81,405 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இது 73.06 சதவீதம் ஆகும். ஆக மொத்தம் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடந்த 6 ஊராட்சி ஒன்றியங்களில் 2 லட்சத்து 66,94 ஆண்களில் 1 லட்சத்து 94,486 பேர் வாக்களித்துள்ளனர். 2 லட்சத்து 73 ஆயிரம் பெண்களில் 2 லட்சத்து 13,825 பேர் வாக்களித்துள்ளனர். 14 இதர 4 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். ஆக மொத்தம் 5 லட்சத்து 39,108 4 லட்சத்து 8,315 பேர் வாக்களித்துள்ளனர். இது 75.74 சதவீதம் ஆகும். ஆண்வாக்காளர்களை விட 19 ஆயிரத்து 339 பெண் வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர்.

Tags : females ,voters ,union election ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...