×

சாயல்குடி அருகே கோழிகளுடன் விளையாடும் மயில்கள்

சாயல்குடி, டிச.30: சாயல்குடி அருகே கோழிகளுடன் கொஞ்சி விளையாடும் மயில்களை கிராமமக்கள் ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர்.
சாயல்குடி அருகே பெருமாள் தலைவனேந்தல் கிராமத்தில் சுமார் 30 வீடுகள் உள்ளன. பலரும் வீடுகளில் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள கோழி, சேவல் மேயும் போது அதனுடன் சில மயில்களும் வந்து மேய்ந்து வருகிறது. இரவு நேரங்களிலும் வீடுகளின் மேற்கூரைகளில் தங்கி வருகிறது. இதனால் அந்த மயில்களுக்கு தேவைப்படும் இரை, தண்ணீரை வைத்து கிராமமக்கள் பாதுகாக்கின்றனர்.

இது குறித்து கிராமமக்கள் கூறும்போது, இங்குள்ள மலட்டாறு உள்ளிட்ட கண்மாய் காட்டு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மயில்கள் கூட்டம், கூட்டமாக இருக்கிறது. இப்பகுதியில் தொடர்ந்து வறட்சி ஏற்பட்டது. இதனால் கடந்த கோடைக்காலங்களில் மயில்கள் இரை, தண்ணீரை தேடி கிராமபகுதிக்குள் வந்து செல்லும். இதனால் கோழிகளுக்கு போடப்படும் இரையினை மயில்களுக்கும் போட்டு வந்தோம். ஆட்களை கண்டால் ஓடி விடும் என்பதால் இரையை போட்டு விட்டு வேலைகளுக்கு சென்றுவிடுவோம்.

இரை மற்றும் தண்ணீர் தேடி வரும் மயில்கள் கோழிகளுடன் சேர்ந்து கொத்தி தின்று விட்டு, காட்டுபகுதிக்கு சென்றுவிடும். ஒரு சில மயில்கள் மட்டும் கோழிகளுடன் நட்பாக பழகி தற்போது கிராமத்திலேயே வீடுகளின் மேற்கூரைகளில் தங்கி விடுகிறது. மயில்களுக்கு நாய்கள் கூட தொந்தரவு கொடுப்பதில்லை என்றனர்.

Tags : Sayalgudi ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்