×

வேப்பனஹள்ளியில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு

வேப்பனஹள்ளி, டிச.30: வேப்பனஹள்ளி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து, உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக 149 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு, 76,348 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். நேற்று வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்த வாக்குப்பெட்டிகள், மை உள்ளிட்ட உபகரணங்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தா முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவக்குமார், ஞானப்பிரகாசம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Veppanahalli ,
× RELATED அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி...