×

கந்திகுப்பம் அருகே மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

கிருஷ்ணகிரி, டிச.30:கந்திகுப்பம் அருகே உள்ள வரட்டனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ(32). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இளங்கோ நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kandikuppam ,
× RELATED கந்திகுப்பத்தில் அனுமன் ஜெயந்தி விழா