×

மண்டல பூப்பந்து போட்டி திண்டுக்கல் கல்லூரி அணி சாம்பியன்

திண்டுக்கல், டிச.30: 19வது மண்டல பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் பூப்பந்தாட்ட போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரி அணி முதலிடத்தை தட்டிச் சென்றது.அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி இணைந்து பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான 19வது பெண்களுக்கான மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் நடைபெற்றது. இதில் சென்னை, திருச்சி, சேலம், திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 19 அணிகள் கலந்து கொண்டன.

இறுதி போட்டியில் சேலம் என்.எஸ்.ஏ பொறியியல் கல்லூரி மற்றும் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி அணிகள் மோதின. இதில், பி.எஸ்.என்.ஏ கல்லூரி முதலிடத்தையும், சேலம் என்.எஸ்.ஏ கல்லூரி அணி இரண்டாமிடத்தை பெற்றன. சென்னை செயின்ட் ஜோசப் அணி மூன்றாமிடத்தையும், எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை அணி நான்காமிடத்தையும் பிடித்தன. அண்ணா பல்கலைக்கழக மண்டல உடற்கல்வி இயக்குனர் இவான்ஜிலின் சிந்தியா மற்றும் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரி முதல்வர் வாசுதேவன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி இயக்குனர் விஜி உள்ளிட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Regional Badminton ,Tournament ,Dindigul College Team Champion ,
× RELATED சில்லி பாயின்ட்…