×

வத்தலக்குண்டுவில் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்

வத்தலக்குண்டு, டிச.30: பழைய வத்தலக்குண்டு ஜி.தும்மலப்பட்டி, கணவாய்ப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு பூக்குழி இறங்கினர். சிலர் தோளில் குழந்தைகளை சுமந்தவாறு இறங்கினர். முன்னதாக குருசாமி முருகன் பல்வேறு பூஜைகள் செய்து முதல் ஆளாக பூக்குழி இறங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : devotees ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி